அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் கடும் சூறைக்காற்று வீசியதில், சரக்கு ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
அமெரிக்காவில் உள்ள Rocky Mountains என்ற மலைத்தொடரில் கடும் புயல் உருவாகி, சமவெளிப் பகுதியை நோக்கி வீசியது. இதில் நெபாராஸ்கா, ஐயோவா, மின்னசொட்டா மற்றும் கொலராடோ போன்ற மாகாணங்களில் கடும் புயல் வீசியது.
இந்நிலையில் மலைத்தொடரில் உருவான புழுதிப்புயல், நகர்களில் பலமாக வீசுவதால், பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் கடும் சூறைக்காற்று வீசுகிறது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 172 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதில், கொலராடோ மாகாணத்தில் El Paso country என்ற பகுதியில் சரக்கு ட்ரக், சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.