அரபிக்கடலில் உருவாக உள்ள நிஷர்கா புயல் நாளை மாலை கரையை கடக்கிறது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து நாளை மாலை கோவா – மும்பை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது கர்நாடகா, கோவா கடற்கரை பகுதிகளில் 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து லட்சத்தீவு, கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு வரும் 4ம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் வடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக குமாரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது