Categories
தேசிய செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம்!

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஜூன் 2ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் குஜராத்தை நோக்கி நகரும். இதனால் ஜூன் 5ஆம் தேதி வரை தென்கிழக்கு,கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகம், உள் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |