Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புயல் கிட்ட வந்துருச்சு – மீண்டும் ரெட் அலர்ட் – தீவிர எச்சரிக்கை …!!

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடலூர் தென்கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக, புதுச்சேரி கடற்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக நிவர் புயல் வலுப்பெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Categories

Tech |