இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அனேக இடங்களிலும், 11, 12, 13 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை 9, 10 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 11, 12 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இது புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.