பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்கனவே மிகப்பெரிய புயல் ஒன்று பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பிரான்சில் புயல் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள Beauvais என்ற நகரில் பெய்த கனமழையால் விபத்துகளும், சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உள்ளூர் ஊடகம் ஒன்று 18 வயது இளைஞர் ஒருவர் இந்த பேரிடரில் மாயமானதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Reims என்று நகரிலும் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆலங்கட்டி மழை, பல நாட்களாக தொடர்ந்து பெய்த மழை, பலத்த காற்று ஆகியவற்றால் பிரான்ஸ் நாடு பேரழிவை சந்தித்ததோடு, மின் சேவையும் அங்கு பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
🔴 La puissance du courant est inouïe. Des voitures emportées par les eaux à Reims. #inondations #orages pic.twitter.com/Rey8UKg36w
— Damien Canivez (@DCanivez) June 21, 2021
பல இடங்களிலும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக நிகழ்ச்சிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை ஆராய்ச்சி மையம் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் ஆரஞ்சு வானிலை எச்சரிக்கை எந்த பகுதிக்கும் விடுக்கப்படவில்லை, மஞ்சள் எச்சரிக்கை பெரும்பாலான பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.