பிரான்சின் சுமார் 25 மாவட்டங்களுக்கு புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையமானது, இன்று அதிக வெப்பநிலை நிலவும் என்று தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடும் புயல் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸில் இருக்கும் சுமார் 25 மாவட்டங்களுக்கு இரண்டாம் தரமான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. எனவே மக்கள், தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறவோ, மரங்களுக்கு அருகில் செல்லவோ கூடாது என்று எச்சரித்துள்ளார்கள்.
திடீரென்று வெள்ள அபாயம் உருவாக வாய்ப்பிருப்பதால், நதி இருக்கும் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். இந்த புயலால் சுமார் 40 லிருந்து 50 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புயல் அதிக பாதிப்பை உண்டாக்கும். எனினும் இரவில் சிறிது வலுவிழக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.