புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லவும், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் வழியாக ரயில் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் சேது விரைவு ரயில் நாளை காலை மண்டபத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக உருவெடுத்தது. இலங்கையில் திரிகோணமலை அருகே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது புரவி புயல். இது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.