திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் பகுதியில் திமுக நிர்வாகியான கவிதாவும் அவரின் கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்திருப்பதை அறிந்து எந்தவிதபரபரப்புமின்றி படுக்கை அறையில் நுழைந்து 6 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இக்கொள்ளை சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .இந்த பதிவுகளை வைத்து அப்பகுதி போலீசார் அம்மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.