தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளார்.
இதனால் பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சியும் தெருநாய்களை பிடிப்பதை நிறுத்திவிட்டனர். இதனால் சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் தெருநாய்கள் கடிக்கு ஆளாவதாக தற்போது தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக நடிகை அமலாவுக்கு தற்போது சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து சிலர் கூறும்போது தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று அதிகாரிகளிடம் சென்றால் அமலாவின் வழக்கை காண்பித்து எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். கடிக்கும் நாய்களை உங்கள் வீட்டின் முன் கொண்டு விட்டால் தான் எங்களுடைய வேதனை புரியும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்கள். மேலும் நடிகை அமலாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.