விடாமல் குறைத்து கொண்டிருந்ததால் தெரு நாயை அடித்துக் கொன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியை சார்ந்தவர் முத்துசரவணன். இவர் அந்த வழியாக சென்று வரும் போது தெருநாய் ஒன்று அவரை பார்த்து குறைத்துக்கொண்டு கடிக்க முயன்றுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைவரையும் அந்த நாயைப் அதே போன்று செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துசரவணன் அந்த நாயை கொள்வதற்காக கணேசபுரத்தில் சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து அந்த நாயை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். மது போதையில் இருந்த விமல்ராஜ் அந்த நாயை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி இந்த சம்பவத்தை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முத்துசரவணன், விமல்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.