தீடிரென தெருவிளக்குகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல்-சித்தன்னவாசல் செல்லும் சாலையில் வரிசையாக பத்துக்கும் மேலான தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் திடீரென ஒவ்வொன்றாக வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து அச்சத்தில் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் ஆய்வு செய்ததில் உயர் அழுத்த மின்கம்பியோடு தெருவிளக்கிற்க்கான மின்கம்பி உரசியதால் தான் விளக்குகள் வெடித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறும் போது, மின்வாரிய அலுவலர்கள் இந்த பகுதியினை தீவிரமாக ஆய்வு செய்து உயர் அழுத்த மின் கம்பிகளை உரிய பாதுகாப்போடு பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முறையற்ற தொழில்நுட்ப பயன்பாடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே உயரழுத்த கம்பிகள் செல்லும் பாதையை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.