வெறித்தனமான காட்சிகளுடன் வெளியான வலிமை படத்தின் Glimpse ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் நேற்று மாலை 6.30மணி அளவில் வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியிடப்பட்டது.
வெறித்தனமான காட்சிகளுடன் வெளியான வலிமை படத்தின் Glimpse ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. மேலும் யூடியூப்பில் இதுவரை வெளியான Glimpse வீடியோக்களில் வலிமை திரைப்படத்தின் Glimpse தான் அதிக லைக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறது.
1. Valimai – 785.3K
2. BheemlaNayak – 728K
3. RadheShyam – 394K
4. BLITZ of DANIELSHEKAR – 360K
5. RadheShyam – 355K