வலிமை திரைப்படத்திற்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக சமூக வலை தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தைக்காண இரண்டு வருடங்களுக்கு மேலாக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவழியாக படப்பிடிப்பின் வேலைகள் அனைத்தும் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது.
இந்நிலையில் வலிமை திரைப்படத்திற்கும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி வலிமை படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சையான காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆகியவவை என 15 இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.
இதனால் மூன்று மணி நேரம் 10 நிமிடங்கள் இருந்த வலிமை திரைப்படம் தற்போது 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகளில் இருந்ததால் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே ஏதாவது ஒற்றுமை இருக்குமா என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.