Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தின் அப்டேட்…. அஜித் சொல்வதை ரசிகர்கள் கேட்பார்களா….?

தமிழ் சினிமா உலகில் ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே முன்னணி நடிகராக இருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டும் தான். அவருடைய படங்களை பல லட்சக்கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள்.இதில் சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது வெளியிலும் ஆக்டிவாக இருக்கின்றனர். பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்பது, சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மொயின் அலி மற்றும் நமது வீரர் அஷ்வினிடம் அப்டேட்  கேட்பது என சில அபத்தங்களை செய்கின்றனர்.

அதை பார்த்து பொறுக்கமுடியாத அஜித் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். வலிமை படத்தின் செய்திகள் உரிய நேரத்தில் வரும். காலத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு . ஆனால் சினிமா எனக்கு ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகளில் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களை சமூகத்தில் நம்மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொதுவெளியில் சமூகவலைத்தளம் கண்ணியம் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். என் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன். என்று ரசிகருக்கு புரியும்படி அவர் சொல்லிவிட்டார். ஆனாலும், வலிமை அப்டேட் பற்றிக் கேட்பதை அஜித் ரசிகர்கள் நிறுத்துவார்களா என்பது சந்தேகம் தான்

Categories

Tech |