Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான “வலிமை” அப்டேட்…. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாதது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் விடாமல் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் செய்யவேண்டும் என்று படக்குழு ஒரு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வலிமை திரைப்படத்தை ஒரு பண்டிகையை முன்னிட்டு, அதிலும் குறிப்பாக தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |