மனசுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
மனதில் சுமையை அதிகரிப்பதற்கான காரணமாக எது அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், ஒருபுறம் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளை நினைத்து பார்ப்பதாலும், மற்றொருபுறம் எதிர்காலம் குறித்த பயம் இருப்பதாலும் தான். இதனால் பலர் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால் வரும் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள்.
அதே சிந்தனையில் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழ மறுக்கின்றனர். இது எதிர்காலத்தில் எதிர்மறையான வாழ்க்கையை தான் கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. கடந்த காலத்தின் நினைவு வேண்டாம். எதிர்காலம் குறித்த பயமும் வேண்டாம். இந்த கணம் விலைமதிப்பற்றது. எதற்காக நடந்து போன விஷயங்கள் பற்றியோ அல்லது இன்னும் நடக்காத விஷயங்கள் பற்றியோ கவலைப்படவேண்டும். எதிர்காலத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி திட்டமிடுங்கள். மீதமுள்ள 23 மணிநேரமும் நிகழ்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.