10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும். அதனை அறிந்து கொள்வது எவ்வழியில் என்பது பற்றிய தொகுப்பு.
- காரணமின்றி கோபமும் எரிச்சலும் கொள்வார்கள்.
- வழக்கத்தைவிட மிகவும் சோர்வாக இருப்பார்கள்.
- மற்றவர்களுடன் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள்.
- தூக்கமின்றி அதிக நேரம் விழித்திருப்பது அல்லது அதிக நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள்.
- எந்த வேலை செய்ய சொன்னாலும் கவனமில்லாமல் செய்வார்கள். இதனால் படிப்பிலும் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது.
- பள்ளியிலும் வீட்டிலும் துருதுருவென இருந்தவர்கள் திடீரென எதிலும் ஆர்வம் இன்றி காணப்படுவார்கள்.
- உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தாலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வருவார்கள்.
- தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னால் இதனை செய்ய இயலாது, எனக்கு வராது என தன்னை தானே தாழ்த்தி பேசுவார்கள்.
- சில சமயம் ஒரு படி மேலே போய் தற்கொலை குறித்தும் பேசத் தொடங்குவார்கள். ஆனால் இது மிகவும் அரிதான அறிகுறியாகும்.