Categories
லைப் ஸ்டைல்

இதை சாப்பிட்டால்…. மனஅழுத்தம் நீங்கும்…. இதய நோய் வராது…. ஆய்வில் தகவல்….!!

சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

பொதுவாக நல்ல காரியங்கள் எதுவாயினும் உதாரணத்திற்கு பிறந்த நாளாக இருக்கட்டும், திருமண நாளாக இருக்கட்டும், அல்லது காதலர் தினமாக இருக்கட்டும் இப்படி எந்த ஒரு நல்ல நாளிலும் இனிப்பை சாப்பிட்டு தொடங்குவது உகந்ததாக இருக்கும். பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு சாக்கலைட்டை பரிசாக வழங்குவர் அல்லது பரிசை பெற்று அதற்கு பதிலாக சாக்கலைட்டை வழங்குவார்கள். அதற்கு காரணம் இனிப்பு உற்சாகத்தின் அடையாளம். சாக்லேட் என்ற பெயரைக் கேட்டாலே இங்கு பலருக்கும் உற்சாகம் பொங்க தொடங்கும்.

ஏனெனில் அனைத்து சாக்லேட் வகைகளும் டிரைப்டோஃபன் என்னும் மூலப் பொருளைக் கொண்டுள்ளது. இந்த மூலப்பொருள் உற்சாகத்தை அதிகரிக்கக்கூடிய அமிலத்தைச் சுரக்கிறது. அதோடு மூளையின் செயல்பாடுகளையும் கூர்மையாக்குகிறது. மேலும் அளவான முறையில் தினந்தோறும் சாக்லேட் உண்பதால், அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் உள்ளிட்டவற்றை வராமல் பெரும்பாலும் தடுக்கும் என BMJ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |