மன அழுத்தம் இல்லாதவர்கள் இல்லை என்றாகிவிட்டது….
இன்றைய காலத்தில் அனைவரும் வேலை வேலை என்று இரவு பகலாக ஓடுகின்றனர் இவர்களுக்கு ஒரு பாதிப்பு நிச்சயம் இருக்கும் என்னவென்றால் மன அழுத்தம்.
மன அழுத்தம் மனிதர்களை ஒன்று நோயாளியாக மாற்றும் இல்லை ராட்சசனாக மற்றும். அதற்க்கு முன்பு நாம் அதில் இருந்து வெளி வருவது சிறந்தது.
மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சில வழிகள்…
- மனதிற்கு இனிமை தரும் பாடலை கேட்கலாம் அது நம் மனதினை அமைதி ஆக்கும்.
- பள்ளி அல்லது கல்லூரி நண்பர்களிடம் பழைய நாட்களை பற்றி பேசலாம்.
- உங்களுக்கு நீங்களே பேசலாம் எதனால் மன அழுத்தம் உங்களின் நல்ல குணங்களை பற்றி யோசியுங்கள்.
- சரியானதை சாப்பிடலாம் பழங்கள் போன்றவைகளை சாப்பிடலாம்.
- வாய் விட்டு சிரித்தால் நோய் மட்டும் அல்ல மன அழுத்தம் கூட காணாமல் போய்விடுமாம்.
- சிறுது தூரம் மெதுவாக நடந்து பாருங்கள் நிச்சயம் மனஅழுத்தம் குறையும். மெதுவாக நடக்கணும் மறக்காதீங்க.
- போதுமான அளவு தூங்க வேண்டும். தூக்கம் இல்லாதது தான் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணம்.