Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி செய்தால் “கடும் நடவடிக்கை”…. மக்களே புகார் கொடுங்க…. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி எச்சரிக்கை…!!!

நெல்லை சரக்கா போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய  மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, மீன், மருத்துவம் பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை வாகனத்தில் ஏற்றி வந்து கொட்ட கூடாது. அப்படி கழிவுகளை கொண்டு வந்து குழி தோண்டி புதைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாகனங்களில் காய்கறி லோடு ஏற்றி செல்கின்றனர். இதனையடுத்து திரும்பி வரும்போது வாகன உரிமையாளருக்கு தெரியாமல் கழிவுகளை கொண்டு வந்து தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உங்கள் பகுதியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் கீழ்க்கண்ட எண்களில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி – 0462-2906025, 9952740740
தென்காசி – 9489003324, 9385678039
தூத்துக்குடி – 0461-2340200, 9514144100
கன்னியாகுமரி – 04652-220167, 7010363173

Categories

Tech |