நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தேவையின்றி இன்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களுடைய 67 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இதுபோல் அத்தியாவசியமின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.