நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அழுவது தொடர்ந்து வரும் நேற்று முன்தினம் இரவு அங்கு பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுவதாக பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் எருமபட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மணல் அள்ளிக்கொண்டிருந்த வாழசிராமணியை சேர்ந்த பிரபு(31), நவலடி பாட்டியை சேர்ந்த துரைசாமி(50), சுரேஷ்(35), பிரபாகரன்(25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் டிராக்டர் உரிமையாளர் பன்னீர் செல்வதையும் தேடி வருகின்றனர்.