அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர் பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சேமிப்பு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து வங்கி மூலம் கடன்பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 1,460 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மே 17 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.