Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண்கள் பற்றி ஆபாச வீடியோ, போட்டோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்…!!!

சோசியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாநில உலக வாழ்வாதார இயக்கம் சார்பாக வேலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சமுதாயத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. குடும்ப தகராறில் தாக்குதல், பாலியல் வன்கொடுமை, வரதட்சனை கொடுமை என பல்வேறு இன்னல்களுக்கு பெண்கள் ஆளாகின்றார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க அதிக பணம் செலவாகும் என பெண் சிசுக்கொலை முன்பு இருந்தது. திருமணத்துக்கு பின்னரும் பெண்கள் வரதட்சனை கேட்டு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் மேலும் பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடங்கள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றார்கள்.

சோசியல் மீடியாவிலும் பெண்களை தவறாகவும் ஆபாசமாகவும் வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிடுகின்றார்கள். சோசியல் மீடியாவில் தவறாக பதிவிட்டிருந்தால் பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி தைரியமாக புகார் கொடுக்கலாம். காவல்துறையினர் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் சோசியல் மீடியாவில் ஆபாச வீடியோ, புகைப்படம் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |