தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு மேல் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கைவிடுத்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணிக்க தீபாவளி அன்று போலீசார் ரோந்து பணி தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.