சீனாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் டெல்டா வைரஸால் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்காலிகமாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விமான சேவைகளும் யாங்சோவின் கிழக்கு நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் தொற்று பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று பரவும் பகுதிகளை தடமறிதல் செயலிகளை பயன்படுத்தி கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அதிகாரிகள் பலரும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாமல் இருப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.