தேனியில் பொதுமக்கள் சுகாதார பணிகளை செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகேயிருக்கும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1ஆவது மற்றும் 2 ஆவது வார்டு பகுதி தனியாகயிருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக குப்பைகளை அகற்றுதல், சாக்கடையை தூர்வாருதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற எந்தவிதமான சுகாதார பணிகளும் செய்யப்படுவதில்லை.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர்களுடன் இணைந்து பேரூராட்சியினுடைய நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.