ஆப்கானிஸ்தான் அகதிகள், தங்கள் நாட்டிற்கு வருவதை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட மக்கள் நேற்று மதியம் நெதர்லாந்து நாட்டிற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்காக நெதர்லாந்தில் அவசர முகாம்கள் 4 அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், Harskamp-ல் இருக்கும் ராணுவ முகாமும் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, வந்த 800 நபர்களை இந்த முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் வருவதை எதிர்த்து Utrecht கிழக்கே இருக்கும் கிராமமான Harskamp-ல் இருக்கும் ராணுவ முகாமின் வரவேற்பு மையத்தின் வெளியில் சுமார் 250 மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை தொடக்கத்தில் அமைதியாக நடத்தியுள்ளனர். அதன்பின்பு, போராட்டத்தை கலைக்குமாறு தெரிவிக்கப்பட்டதை இளைஞர்கள் பலர் கேட்காததால் மோதல் அதிகரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தேசியவாத பாடல்களை பாடியதோடு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை காட்டிவிட்டு டயர்களை தீ வைத்து எரித்துள்ளனர்.
எனவே, காவல்துறையினர் நாய்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின்பு ஆர்ப்பாட்டத்தை கலைத்து, போராட்டம் நடத்தியவர்களையும் அடித்து விரட்டினர். எனினும் யாரையும் கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.