Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீது தடியடி… உ.பியில் பரபரப்பு…. காங்கிரஸ் தொடர்கள் அதிர்ச்சி …!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்ததால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்த இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது.

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் கூட நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இப்போது போலீசார் என்னைத் தள்ளி, லாதிசார்ஜ் செய்து தரையில் தள்ளினர்.   மோடி மட்டுமே இந்த நாட்டில் நடக்க முடியுமா? ஒரு சாதாரண மனிதனால் நடக்க முடியாதா? எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பிள்ளார்.

Categories

Tech |