Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் ‌‌….. போலீஸ் நடவடிக்கை….. !!

தடை செய்யப்பட்ட வேதி பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து பேரியம் வேதியல் பொருட்கள் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 10 ஆயிரம் வாலா சரவெடி களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசின் விதிமுறைகளை மீறி பேரியம் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகளை விற்பனை செய்த கடைகளுக்கு உரிமம் ரத்து செய்ததோடு, அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இதே போல் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,424 சரவெடி பெட்டிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |