கடலில் சூறைக்காற்று வீசியதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலில் சூறைக்காற்று வீசப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சூறை காற்று வீசியதால் 5000 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பரபரப்பாக இருந்த இடம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.