Categories
அரசியல் மாநில செய்திகள்

மின் பெட்டிகள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை…. அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை…!!

சென்னை சிட்லபாக்கம் பக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிட்லபாக்கம் சேது ராஜ் மரணத்திற்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என்று கூறுவதை மறுத்தார். சேது ராஜ் இறப்பதற்கு முன்பாக அவ்வழியாக சென்ற காங்கிரீட் லாரி மின்கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு அந்த மின்கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கு புகைப்பட ஆதாரங்களையும் காண்பித்தார்.

Image result for தங்கமணி

அதேபோல முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் மரணத்திற்கும் மின்வாரியத்திற்கு தொடர்பு இல்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார் மின்சாரா பேட்டிகள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Categories

Tech |