Categories
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று…. கனமழை…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிறமும் வளிமண்டல கீழ் அடுக்கு வளர்ச்சி காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி முழங்குடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை முன்னாள் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்ற மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |