அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கிய போது மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்காக பாகிஸ்தான் நாட்டுக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளால் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக எங்களுடைய பாகிஸ்தான் நண்பர்களுக்கு நாங்கள் கூடுதல் நிதி உதவி வழங்கி உதவி செய்யப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.