Categories
இந்திய சினிமா சினிமா

பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு….‌ 2 மாநிலங்களில் படத்தை திரையிட அதிரடி தடை?…. அதிர்ச்சியில் படக்குழு….!?!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு மத்திய மந்திரி நரோட்டா மிஸ்ரா படத்தில் இடம்பெற்ற காவி நிற உடை மற்றும் அந்த பாடல் வரிகள் போன்றவற்றை நீக்காவிட்டால் படம் திரையிடப்பட மாட்டாது என்று எச்சரித்துள்ளார்.

அதன் பிறகு பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளை கொளுத்துவோம் என்று ஹனுமன் காரி அமைப்பு எச்சரித்துள்ளது. சத்தீஸ்கர் மாநில முதல்வரும் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதன் பிறகு மத்திய பிரதேசம் மாநில சபாநாயகர் கிரிஷ் கௌதம் நடிகர் ஷாருக்கானிடம் உங்கள் மகளுடன் சேர்ந்து அந்த படத்தை பார்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோன்று பீகார் மாநிலத்தின் பாஜக தலைவர் ஹரிபூஷன் தாக்கூரும் பதான் படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதோடு பீகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் தியேட்டர்களில் பதான் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று‌ கூறியுள்ளனர். மேலும் பதான் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |