Categories
தேசிய செய்திகள்

பலத்த பாதுகாப்பு… ”ஜம்மு, லடாக் முதல் சுதந்திர தினம்”…சிறப்பான கொண்டாட்டம்….!!

நாளை சிறப்பாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்று ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்படட பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசுகள்  மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினமானது மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image result for ஜம்மு, லடாக் முதல் சுதந்திர தினம்

அதே நேரத்தில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுகளின் அடிப்படையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்திய ராணுவம் , CRPF  , காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஸ்ரீநகர் வரக்கூடிய பயணிகள் விமான நிலையத்தில் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Image result for சுதந்திர தினம் பாதுகாப்பு

அதேபோன்று விமான நிலையம் முழுவதும் கடும் சோதனை நடத்தியே பயணிகள் அனுப்ப படுகின்றனர்.  போர்நிறுத்த ஒப்பந்த எல்லை பகுதியில் இராணுவத்தின் சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  ஏனெனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விட கூடாது என்பதை கருத்தில் கொண்டு மிக அதிக அளவிலான பாதுகாப்போடு சிறப்பான வகையில் இந்த சுதந்திரத்தை கொண்டாட  வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |