தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர், கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.
ஆலோசனை கூட்டம்:
சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் கொரோனா சற்று அதிகரித்து இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இன்றைக்கு சென்னை மாநகர பகுதியில் கொரோனா வைரஸை தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.
விவரத்தை சொன்னார்கள்:
அதே போல உயர அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள், தலைமைச் செயலாளர், டிஜிபி, IAS அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்கனவே அரசால் நியமிக்கப்பட்ட 15 மண்டல இந்திய ஆட்சிப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்திலோ, மண்டலத்திலே என்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விவரத்தை எல்லாம் தெரிவித்தார்கள்.
கடுமையாக முயற்சி எடுக்கோம்:
தொற்று அதிகம் உள்ள சில மண்டலங்களை குறிப்பிட்டுச் சொன்னார்கள். அங்கே மக்கள் நெருக்கமாக வாழுகின்ற பகுதி அதனால் நோய் பரவல் கூடுதலாக இருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு அரசைப் பொறுத்த வரைக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 13,000 பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் 4000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.