Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்…. கலந்து கொண்ட பலர்….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அவர்கள் கூறியதாவது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |