ராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போரட்டத்திற்கு நகர தலைவர் மாரிச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் இருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து சென்று கொண்டே நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.