Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்கையும் சிக்னல் இல்ல…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பள்ளி மாணவர்கள் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி ஊராட்சி உட்பட்ட பல்வேறு கிராமங்களில் செல்போன் டவர் இல்லை. இதனால் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தண்ணீர் தொட்டிகளிலும், மரங்களிலும் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர்.

இதனால் சிக்னல் கிடைக்காமலும், பாடங்களை சரியாக கவனிக்க முடியாமலும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |