Categories
மாநில செய்திகள்

27-ஆம் தேதி போராட்டம் ”பாலின் விலை மேலும் உயரும்” உற்பத்தியாளர் சங்கம்….!!

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த கோரி 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி பெரம்பலூரில் செய்தியாளரிடம் பேசினார். அப்போது மாட்டுக்கு கொடுக்கும் தீவனங்கள் 50 சதவீதத்துக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது. பாலுக்கு மட்டும் மிகக் குறைந்த விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் என்றும்  விலை உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள் இது ஏற்புடையதல்ல.

Image result for பாலின் விலை

ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை 40 ரூபாய் , எருமைப் பால் விலை 50 ரூபாய் என நிர்ணயிப்பார்கள் என்று நினைத்தோம்.இந்த விலையை அரசு நிர்ணயிக்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் வருகின்ற 27_ஆம் தேதி போராட்டம் நடத்த இருக்கின்றோம். அது எந்த மாதிரியான போராட்டம் என்று வருகின்ற 23 ஆம் தேதி எங்களுடைய மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இவர்களின் போராட்ட அறிவிப்பால் பாலின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா என்கின்ற அச்சம் எழுந்துள்ளது.

Categories

Tech |