Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கண்டிப்பா செய்வோம்…! ”மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டம்” – திருமா

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து நாளை கருப்பு சின்னம் ஏற்றுவோம் என்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். திமுக கூட்டணி ஒரு படி மேலே சென்று போராட்டம்  அறிவித்தது. நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே சமூக விலகலை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடம் என்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு  தமிழகம் கேட்ட நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

திமுக கூட்டணி கட்சி சார்பில் மக்களுக்கு அழைப்பு என்று எடுத்துக்கொண்டாலும் மறுபக்கம் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களின் தொண்டர்களுக்கு இது குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கின்றனர். விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பு நின்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கருப்பு சின்னம் ஏற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |