லெபனான் நாட்டில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் குழந்தையை உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் அரசியல் தலைவர்கள் ஊழலில் மிகுந்து விட்டதாக அவர்களை எதிர்த்து பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனது 15 மாதக் குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த எலியானே ஜாபுவாரின் காரை போராட்டாகர்கள் சூழ்ந்விட்டார்கள்.
தனது காரில் உள்ள குழந்தை பயந்துவிட்டதாக எலியானே கூறிய மறுகணமே அவர்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பாடலான ‘பேபி ஷார்க்’ பாடலை பாடி குழந்தையை உற்சாகப்படுத்த முயன்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.