மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில், “வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அவருடைய அக்கா குழந்தை அழுததால் எழுந்து பார்த்த போது அருகில் பாக்கிய லட்சுமியை காணாமல் தேடியுள்ளனர். இதையடுத்து அருகில் அந்த கிணற்றில் விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் ஒருவன் தான் என்னுடைய இறப்பிற்கு காரணம். அவனை விட்டுறாதீங்க. அவனிடம் நிறைய பெண்கள் சிக்கி இருக்கின்றனர்.
எனக்கு நேர்ந்த நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளார். இதையடுத்து மாணவி செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வு செய்தபோது மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது அவர் அந்த மாணவியை ஒதுக்கியதும் அதனால் கோபம் அடைந்த வாலிபர் மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.