8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பெரியார் நகரில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் அபி ஏஞ்சல் என்ற மகள் இருந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாணவி அபி ஏஞ்சல் தினந்தோறும் செல்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாயார் வீட்டு வேலை செய்யாமல் செல்போனை பயன்படுத்துவதை கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி வீட்டிலிருந்த மண்எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.