Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நண்பருடன் சென்ற சிறுவன்….. தீடீரென நடந்த விபரீத சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 7 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் குமார் தனது நண்பனான சஞ்சய் உடன் வச்சக்காரப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து சஞ்சய் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |