திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளன். தமிழ்செல்வன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் அருகில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியில் தண்ணீரைக் கண்ட சிறுவன் தனது ஆடைகளை கழட்டி விட்டு குளிக்க ஏரியில் இறங்கியுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளன்.
இதனை அறியாத தமிழ்ச்செல்வனின் பெற்றோர் இரவு முழுவதும் பல இடங்களில் அவனை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மறுநாள் காலையில் ஏரிக்கரை வந்தபொழுது தமிழ்ச்செல்வனின் சீருடையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் ஏரியில் இறங்கி தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு கொண்டு வந்தன.ர் இதுகுறித்து தச்சம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.