இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் எனவும் இருமொழி கல்வி கொள்கை தான் தமிழக அரசின் முடிவு எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் அமைத்திருக்கும் புதிய துணை மின் நிலையத்தை அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் போன்றோர் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தனர்.
மின் நிலையத்தை தொடங்கி வைத்த பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த வருடம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இரு மொழிக் கல்வி கொள்கைதான் அரசின் முடிவாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.