உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரான வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் இருக்கும் சீன தூதரகம் காயமடைந்த அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறது. அவர் இப்போது அபாய நிலையை கடந்து விட்டார். உக்ரைன் நாட்டில் இருக்கும் சீனர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
அந்நாட்டில் மொத்தமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான சீன மக்கள் இருக்கிறார்கள். அதில் 2500 பேர் பாதுகாப்பான பகுதிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து நாடுகளின் வழியே அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.